எல்லா கட்டுரைகளுக்கும் செல்லுங்கள் கரப்பானை கட்டுபடுத்த நீங்களாகவே செய்யக்கூடிய வீட்டுத் தீர்வுகள்

கரப்பானை கட்டுபடுத்த நீங்களாகவே செய்யக்கூடிய வீட்டுத் தீர்வுகள்

சுற்றித் திரியும் கரப்பான்கள் நமக்கு எரிச்சலூட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவை வேகமாக பரவும் என்பதால் அவற்றை முடிந்தவரை சீக்கிரம் தவிர்க்க வேண்டும். அதற்கு நீங்கள் பயன்படுத்தும் வழிகளை மேற்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

தீங்கு விளைவிக்கும் இரசாயணங்களைக் கொண்ட பல தயாரிப்புகள் சந்தையில் உள்ளன. இந்த இரசாயணங்களை சுவாசிக்கும்போது பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, சுற்றி இருக்கும் குழைந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்ககான அபாயங்களை அதிகரிக்கும். கரப்பான்களைக் கொல்ல மக்கள் வீட்டுத் தீர்வுகளைத் தேர்ந்தெடுக்க இது ஒரு காரணம்.

மற்றொரு காரணம் பூச்சி கட்டுப்பாடு சேவைகள் போன்ற தீர்வுகள் விலையுயர்ந்ததாக உள்ளன, குறைந்த விலையில் கரப்பான் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கையில், இதுபோன்று வீணாக செலவழிப்பது அர்த்தமற்றது. எனவே, மலிவான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வீட்டுத் தீர்வுகள் முக்கியமானவை ஆகின்றன.இதோ சில விருப்பங்கள்.

உங்கள் எதிரி உங்களைத் தாக்குவதை நிறுத்துவது எப்போதும் அறிவுறுத்தப்படும் ஆலோசனை ஆகும்.​ அதனால் நீங்களும் சண்டை போட தேவையில்லை. கரப்பான்கள் உங்கள் இடத்திற்கு நுழைவதை நிறுத்த வலைகள் பூச்சி திரைகளைப் பயன்படுத்தவும். அனைத்து ஓட்டைகளையும் அடப்பான்கள் மற்றும் பெயின்ட் கொண்டு மூடவும். சோப்கள் மற்றும் கிளீனர்களைப் பயன்படுத்தி வீட்டை முறையாக சுத்தம் செய்யவும். குப்பைகள் மற்றும் தண்ணீரை மூடி வைக்கவும்.

 • சில போரிக் அமிலம், வெள்ளை மாவு, சர்க்கரை மற்றும் காபி பவுடரை ஒன்றாக கலக்கவும்.​ காபியின் வாசத்திற்கு ஈர்க்கப்பட்டு, அதைத் தின்று இறந்துவிடும். ஆனால் வீட்டில் செல்லபிராணி இருந்தால், அவை நக்காமல் கவனமாக பார்த்து கொள்ளவும்.
 • தண்ணீர் பொறியைப் பயன்படுத்தியும் கரப்பான்களைக் கொல்ல முடியும். ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலைப் பயன்படுத்தி அதை உருவாக்கலாம். ஒரு குளிர்பான பாட்டிலின் கழுத்து பகுதியை வெட்டவும். அதில் தண்ணீர் மற்றும் காபி கஷாய கலவையை கொண்டு நிரப்பவும். காபியின் வாசனை கரப்பான்களை ஈர்க்கும். வெட்டப்பட்ட மேல் பகுதி மேலே பார்த்தவாறு ஒரு புனலைப் போல வைக்கவும். வாசனைக்கு ஈர்க்கப்பட்டு கரப்பான்கள் நுழையும் ஆனால் அவற்றால் வெளியே செல்ல முடியாது. அதன் கூட்டின் அருகில் அதை வையுங்கள். இது அவற்றை பொறியில் மாட்ட வைக்கும் ஆனால் சாகடிக்காது.

 • போரக்ஸ் மற்றும் சர்க்கரையின் கலவை கரப்பான்களை கொல்ல ஒரு தூண்டிலாக பயன்படுத்தலாம். எனினும், போரக்ஸ் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது  என்பதால் குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை கவனமாக பார்த்து கொள்ளவும்.

 • கரப்பான் பூச்சிகள் மீது துணி மென்மைபடுத்தியைத் தெளித்தால் மூச்சு திணறலை ஏற்படுத்தும். மூச்சு திணறலால அவை இறக்கும். எனவே தண்ணீர் மற்றும் துணி மென்மைபடுத்தியை கரப்பான்கள் மீது தெளிக்கலாம்.

 • ஹிட் ஆன்டி ரோச் ஜெல் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த தீர்வாகும். வீட்டுத் தீர்வுகள் மலிவாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதால் மக்கள் அதை பயன்படுத்துகின்றனர். ஹிட் ஏஆர்ஜி சிக்கனமாக விலையில் வெறும் ரூ.150 க்கு கிடைக்கிறது. இந்த வாசனையற்ற ஜெல்லில் எந்தவித தீங்கு விளைவிக்கும் இரசாயனமும் இல்லை மற்றும் இது மிகவும் பயனுள்ளவை. ஒருமுறை உபயொகித்தால் இது கரப்பான்களின் கூட்டத்தையும் அழித்துவிடும். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு நீங்கள் கரப்பான்களைப் பார்க்க மாட்டீர்கள். கரப்பான் வராமல் இருக்க ஒவ்வொரு 45 நாட்களுக்கும் இதை உபயோகியுங்கள்.

சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை ஆராயுங்கள்

hit-anti-roach-gel
lal-hit
hit-chalk
சரியான வகையில் பூச்சிகளை எதிர்த்துப் போராடுங்கள்

உங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்!

 • டெங்கு
 • சிக்கன்குனியா
 • மலேரியா
 • காக்க்ரோஅச்செஸ்
 • மன்த்ளீ கிச்சன் கிளீனிங்
 • எலி